பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
வேதியியல் பேராசிரியரான இவர், களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார்.
இவர் 1997ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
அத்துடன், சமையல் எண்ணெய்களின் இரசாயன மற்றும் ஊட்டச்சத்து பண்புகள் குறித்து பல ஆராய்ச்சிகளை நடத்திய ஒரு முக்கிய பேராசிரியரும் ஆவார்.
சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, இதுவரை களனி பல்கலைக்கழகத்தின் முதுகலை பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.