ரூ.25 கோடி ஐஸுடன் வர்த்தகர் கைது
சுமார் இருபத்தைந்து கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை தேயிலை தூள் பொதிகளில் கடத்தி வந்த விமானப் பயணி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால், நேற்று (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய வர்த்தகர் ஆவார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர், நேற்று இரவு 11.30 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH-179 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பையில் இருந்து, தேயிலை தூள் அடங்கிய பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 179 கிராம் ஐஸ் போதைப்பொருள் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.