லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சுட்டுக் கொலை!
கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் தனிப்பட்ட செயலாளரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் கண்டி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (20) உயிரிழந்துள்ளார்.
மஹய்யாவ பிரதேசத்தில் வைத்து இந்த நபர் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.