வீடொன்றில் தீ – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
சிலாபம், சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது பிள்ளை உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 42 வயதுடைய ஆண், 40 வயதுடைய பெண் மற்றும் 15 வயது சிறுமி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.