கோட்டையிலிருந்து மருதானை வரை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம்
கோட்டை புகையிரத நிலையத்தின் புகையிரத சுவிட்ச் (Railroad Switch) பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மருதானை நோக்கி செல்லும் அனைத்து புகையிரதங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதன்படி கொழும்பு வரும் அலுவலக புகையிரதமும் தாமதமாகியுள்ளது.
தற்போது பராமரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அது சீரமைக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.