சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்
சிலாபம் – சிங்ஹபுர பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட மூவரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவரே தமது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு, தமக்குத் தாமே தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தை, 44 வயதுடைய தாய் மற்றும் அவர்களுடைய 15 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களின் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.