வெற்றிலைக் கூரு விலை சடுதியாக அதிகரிப்பு!
வவுனியாவில் பாக்கு விலை அதிகரித்துள்ளதுடன், வெற்றிலைக் கூரு ஒன்றின் விலை 150 ரூபாயாக அதிகரித்துள்ளது.
4 ரூபாவாக இருந்த சாதாரண பாக்கு 30 ரூபாவாகவும், நடுத்தர அளவிலான பாக்கு 40 ரூபாவாகவும், பெரிய அளவிலான பாக்கு 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும் பழுக்காத பாக்கு இரசாயனம் தடவி பழுத்த பாக்காகச் சந்தைக்கு விநியோகம் செய்யும் கொள்ளையொன்று அம்பலமாகியுள்ள நிலையில், வவுனியா நுகர்வோரும் வியாபாரிகளும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பாக்கு தட்டுப்பாடு காரணமாக தற்போது வெற்றிலைக் கூரு 150 ரூபாயாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.