காஸ் விலை கூடுமா?
காஸ் விலையை அதிகரிக்கபோவதாக காஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளனவா? காஸ் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா? என இன்று (22) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்,
விலைகளை அதிகரிப்பதற்கு முறைமையொன்று உள்ளது. அவை தொடர்பில், காஸ் நிறுவனங்கள் ஊடக அறிக்கைகள் மூலம் அறிவிக்கும். எனினும், விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா? என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்றார்