உள்நாடு

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் “நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை” ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல், வானவிலங்கு, வனவள, நீர் வழங்கள், பெருந்தோட்ட மற்றும் உடகட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக நாளை (23) கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மற்றும் கடுவெல ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய கொழும்பு எல்லைக்கு உட்பட்ட வெலிக்கடை, கிருலப்பனை மற்றும் நிதி அமைச்சினைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் ஊடாக தேங்காய் கொள்வனவு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தினூடாக 100 – 120 வரையில் தேங்காய் கொள்வனவு செய்ய முடியும் என்றும் சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *