நாடு முழுவதும் பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு அடிக்கடி வரும் நகரங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிகம, பண்டாரவளை மற்றும் எல்ல உள்ளிட்ட பல நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் இருக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.