பாதுகாப்பு குறித்து பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அறுகம்பேயின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விசேட கருத்து வெளியிடும் போதே பதில் பொலிஸ்மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அறுகம்பை சுற்றுலா பகுதி தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து பல நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளன.
பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகியன ஏற்கனவே தங்கள் நாட்டுப் பிரஜைகளை இது தொடர்பில அறிவுறுத்தல் விடுத்துள்ள நிலையில், தற்போது நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.