ரத்மலானையில் துப்பாக்கிச் சூடு!
இரத்மலானை ரயில் முற்றத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொள்ளையர்கள் சிலர் ரயில் முற்றத்திற்கு பிரவேசித்து, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, சந்தேக நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்களின் தாக்குதலில் காயமடைந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.