10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை!
10 வெளிநாட்டவர்களுக்கு நீர் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) மரண தண்டனை விதித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 146 கிலோ கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அதன்படி 9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.