அறுகம்பே விவகாரம்; இந்திய புலனாய்வு அமைப்புகளே முதலில் எச்சரித்தன.
அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
புலனாய்வுத் தகவல்களின்படி, வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அச்சுறுத்தல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல் முதலில் ஒக்டோபர் 7 ஆம் திகதி பெறப்பட்டதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார்.
வெளிநாட்டு பிரஜைகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் கூறினார்.
இரண்டு இலங்கையர்களில் தாக்குதலை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒருவர் ஈராக்கைத் தளமாகக் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது.
இவர்களுக்கு சுமார் ரூ.5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் உட்பட அனைத்து தொடர்புடைய தகவல்களையும் இலங்கை அதிகாரிகளுக்கு இந்திய புலனாய்வு அமைப்புக வழங்கியுள்ளன.