இஸ்ரேலியர்களைத் தாக்கும் திட்டம் – மூன்று பேர் கைது
இந்த நாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர்கள் மூவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.