இலங்கை கணிசமான முன்னேற்றம்
பொருளாதார மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி சந்திப்புகளுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.