தம்புள்ளை சுற்றுலாத்தளங்களுக்கு விசேட பாதுகாப்பு
தம்புள்ளை நகரிலும், தம்புள்ளையைச் சூழவுள்ள சுற்றுலாப் பகுதிகளிலும் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, தம்புள்ளை ரஜமகா விகாரை, தம்புள்ளை உயவத்த ரஜமகாவிகாரை மற்றும் சுற்றுலாத்தளங்கள், உணவகங்கள் என்பவற்றில் விசேடப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.