பாதுகாப்பு குறித்து விமான நிறுவனத்தின் அறிவிப்பு
இலங்கையின் விமான நிலையம் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக, விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 19 மற்றும் 24ஆம் திகதிகளில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) உள்ள விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு வைப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பன்ட சம்பவம் காரணமாக, பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த அச்சத்தைத் தடுக்கும் முகமாக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் சிவில் விமான நிலைய ஆபரேட்டர் என்ற வகையில், எங்களின் மதிப்புமிக்க பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக நாங்கள் நெருக்கமான ஒருங்கிணைப்பில் உள்ளோம். மற்றும் விமான நிலைய பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதுபோன்ற சூழ்நிலைகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கும் பதிலளிப்பதற்கும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படும்”என்றார்.
எங்களின் மதிப்புமிக்க பயணிகள் எங்கள் விமான நிலையத்தில் இனிமையான பயணத்தை அனுபவிப்பதை உறுதிசெய்ய, எங்கள் நிர்வாகம், பிற சேவை வழங்குநர்களுடன் இணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான சூழ்நிலைகளினால் எமது விருந்தினர்களுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் மனப்பூர்வமாக வருந்துவதாகவும், அவர்களின் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.