கைவிடப்பட்ட கார் மீட்பு
மஹரகம, பரண வீதியில் உள்ள ஆடை விற்பனை கடை ஒன்றின் முன்பாக, மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக, மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகனம் பல இடங்களில் விபத்துக்குள்ளானதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஹரகம வர்த்தக சங்க உறுப்பினர்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது