சுற்றுலாத்தலங்களுக்கு தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு
சுற்றுலாதலங்களில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர், இராணுவ உத்தியோகத்தர்கள், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அறுகம்பை, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள் தங்கும் அனைத்து இடங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது