5 கிலோ கிராம் ஐஸ் உடன் வர்த்தகர் கைது
அண்ணளவாக ரூ. 73.64 மில்லியன் மதிப்புள்ள “ஐஸ்” போதைப்பொருளை பயணப் பையில் அரிசிப் பொதிக்குள் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணி ஒருவர் வெளியேற முற்பட்ட போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த பயணி மற்றும் இருவரும் அவருடன் கைது செய்யப்பட்டனர்.
கொத்தட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான வர்த்தகரான குறித்த பயணி, கோழிப்பண்ணை ஒன்றினை வைத்துள்ளதுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அரிசிப் பொதிக்குள் தனது பயணப் பையில் 5.026 கிலோகிராம் “ஐஸ்” போதைப்பொருளை மறைத்து வைத்திருந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் வெபோட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சாரதி மற்றும் அவரது உதவியாளரான 33 வயதுடைய பாணந்துறை சேர்ந்த பெண்ணுமாவர்