காரில் வெடிமருந்து கொண்டு சென்ற இரண்டு இளைஞர்கள் கைது
வெடிமருந்துகளுடன் இரண்டு சந்தேக நபர்களை பதவிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை (27) பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 1ஆவது மைல் கல் பகுதியில் கார் ஒன்றை சோதனையிட்ட போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திச் சென்ற வெடிமருந்துகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் 75 கிலோ கிராம் வெடி மருந்து, 90 ஜெலிக்னைட் குச்சிகள், 300 டெட்டனேட்டர்கள் மற்றும் 5 நூல்கள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 30 வயதுடைய ஹிதோகம மற்றும் மாபலடிக்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.