Technologyஉள்நாடு

வட்ஸ் ஏப்பில் இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை !!

சிலரின் WhatsApp இலக்கங்கள் Hack செய்யப்பட்டு அவர்கள் கடன் கேட்பதுபோல் WhatsApp Message s ஊடாக “வேறொருவரின்” வங்கிக் கணக்கு இலக்கம் பகிரப்பட்டு பணம் பெறும் ஏமாற்று வேலை நடந்து வரும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபல வர்த்தர்களின் இலங்கங்கள் ஹெக் செய்யப்பட்டு அவர்களின் “வட்ஸ் ஏப்” இலக்கம் ஊடாக அவரோடு தொடர்பில் உள்ள நபர்களிடம் அவசரமாக ஒரு தொகை பணம் வைப்பிடும் படி கோரப்படுகிது. அதற்காக உள்நாட்டு கணக்கு இலக்கங்களும் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

மேசேஸ் அனுப்பும் வட்ஸ் அப் இலக்கத்தின் உண்மையான உரிமையாளரை தொலைபேசியை மூலம் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டால் அவர் இது தொடர்பில் அறியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற மூன்று தகவல்கள் மடவளை நியுஸ் குழு உறுப்பினருக்கும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த விடயம் தொடர்பில் மக்கள் மிகக்கவனமாக இருக்குமாறு கோருகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *