உள்நாடு

ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்த கட்டிடங்கள்

பாணந்துறை நகரின் ஜனப்பிரிய மாவத்தையில் வரிசையாக அமைந்திருந்த, 5 பழைய இரண்டு மாடிக் கட்டிடங்கள் இன்று (30) பிற்பகல் ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்துள்ளன.

குறித்த கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தமையினால் அருகில் உள்ள காலி வீதி உள்ளிட்ட பகுதிகளில் தூசுத் துகள்கள் படிந்தன.

ஜனப்பிரிய மாவத்தையின் வீதி இருபுறங்களிலும் வடிகால் அமைப்பைத் தயாரிக்க மாநகர சபையினால் ஒப்பந்ததாரர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்று (30) பிற்பகல் மண் அகற்றும் இயந்திரத்தின் உதவியுடன் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

குறித்த மண் அகற்றும் இயந்திரம் மற்றும் மண் நிரப்பப்பட்ட லொறி அதிலிருந்து வெளியேறியவுடன், இந்த கட்டிடங்கள் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்தன.

மண் அகற்றும் இயந்திரத்தால் ஏற்பட்ட நில அதிர்வே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என அருகில் உள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.

குறித்த கட்டிடங்களின் கீழ் தளங்களில் பல் அறுவை சிகிச்சை, ஆடை விற்பனை நிலையம் உள்ளிட்ட பல கடைகள் இருந்ததோடு, அவைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது 5 கடைகளில் 2 கடைகள் திறந்திருந்ததாகவும், ஏனைய 3 கடைகள் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *