ஸ்பெயினில் திடீர் வெள்ளம் – 51 பேர் பலி
தென்கிழக்கு ஸ்பெயினில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் பெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழப்பு எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க முடியாது என வலென்சியா பிராந்தியத்தின் தலைவர் கார்லோஸ் மசோன் தெரிவித்துள்ளார்.
வலென்சியா பிராந்தியத்தில் உள்ள சிவா பகுதியில் எட்டு மணித்தியாலங்களில் 491 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. இது ஸ்பெயினில் ஒரு வருடத்தில் பெய்யும் மழைக்கு சமனானது என அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லெட்டூர் நகராட்சியில் காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு அவசர சேவைப் பணியாளர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது