2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணையைப் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.