ரூ.200 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் கைது!
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவின் இரண்டு உதவியாளர்கள் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய பொரலஸ்கமுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதாகியுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 7 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஒரு கிலோ கிராமும் 17 கிராமும் நிறையுடைய ஐஸ்ரக போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
41 மற்றும் 53 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.