ஊழலற்ற நல்ல சிந்தனையாளர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும்!
- ஐ.ம.ச. வேட்பாளர் பாயிஸ் மல்வானையில் தெரிவிப்பு!!
+++++++++++++++++++++
ஊழலற்ற நல்ல சிந்தனையாளர்கள் இம்முறை பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற மக்களின் மனோ நிலையை நானும் வரவேற்கின்றேன். நாட்டில் நிறைவான மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.
- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் பாயிஸ் மல்வானையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பின் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது வளமான நாட்டை கடந்த ஆட்சியின் போது மக்கள் ஏற்றுக்கொள்ளாத பலரும் பாராளுமன்றம் சென்று படுகுழியில் தள்ளினர்.
அதனை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். அதன் பிரதிபலிப்பு இன்றைய ஆட்சிமாற்றம்.
ஆட்சி அநுரவிடம் இருக்கட்டும், இருப்பினும் அமைப்போகின்ற அரசாங்கத்தில் பலமான அமைச்சரவை மற்றும் அனுபவமுள்ள பிரதமர் உருவாக வேண்டும்.
அதற்கு பொருத்தமானது ஐக்கிய மக்கள் சக்திதான். இந்த விடயத்தில் மக்கள் குழப்பமடையாமல் வாக்களிக்க வேண்டும்.
தங்கள் வாக்குரிமைகளை சிறந்ததாக பயன்படுத்துங்கள். தகுதியானவர்களுக்கு வழங்குங்கள்.
இம்முறை நீங்கள் தெரிவுசெய்கின்ற பிரதிநிதிகள் வளமான நாட்டை கட்டியெழுப்பவர்களாக இருக்க வேண்டும் – என்றார்.
(ஊடகப் பிரிவு)