இரத்மலானையில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய்
இரத்மலானையை அண்மித்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்று அண்மையில் இரத்த சிவப்பாக மாறியதையடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CEA) அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
CEA இன் மேல் மாகாண அலுவலகம் சோதனைகளை நடத்திய போது , தண்ணீரில் கரையக்கூடிய சாயம் அசாதாரண நிறமாற்றத்தை ஏற்படுத்தியது என கண்டுபிடிக்கப்பட்டது.
இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , சாயம் ஒரு குடியிருப்பாளரால் சேமித்து வைக்கப்பட்டதாகவும், கனமழையின் போது தற்செயலாக அது கால்வாயில் கலந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.