கட்டுரை

சம்மாந்துறை ஜனாஸா வாகன கொள்வனவுக்கு கைகொடுப்போம்!

பர்ளு கிபாயா கடமையான ஜனாஸா விடயத்தில் நாம் அனைவரும் மனிதம் எனும் வகையிலும், மார்க்கத்தின் விழும்பிலும் நிர்ப்பந்தமானவர்கள்.

நாமறிந்த ஒவ்வொரு ஜனாஸாக்களின் போதும் எமது உள்ளங்களில் இழப்பு ரீதியான கவலைகள் சுழன்று கொண்டே இருக்கும்.

தற்போதய கால கட்டத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பினர் எமது பிரதேசங்களில் ஜனாஸா கடமைகளுக்கு உதவிகளை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

அல்லாஹ் அவர்களின் நற்பணி பொருந்திக் கொள்வானாக!

இதன் தொடரில் சம்மாந்துறையில் ஜனாஸா சேவைக்காக தனியான இரண்டு வாகனங்கள் இயங்கி வருகின்றமையும் யாவரும் அறிந்ததே.

அதில் ஒன்று பிரதேச சபை வாகனம், மற்றது உஸ்வா மௌலவி என அழைக்கப்படும் முஸ்தபா மௌலவியினால் செயற்படுத்தப்படும் வாகனம்.

இன்றுள்ள நிலைமையில், தூரப் பிரதேசங்களில் இருந்து ஜனாஸாக்களை எடுத்து வருவதில் நடுத்தர வர்க்கத்தினர் படுகின்ற பெருந்துயரை நாம் கண்டிருக்கலாம் அல்லது பகுதியளவில் அறிந்திருக்கலாம்.

குறிப்பாக; பெரும்பாலும் கொழும்பு, கண்டி, மஹரகம, றாகம, பொலன்னறுவை போன்ற தூர பிரதேச வைத்தியசாலைகளிலிருந்து ஜனாஸாக்களை கொண்டுவருவதில் பலர் பல சிரமங்களை சந்திக்கின்றனர்.

ஜனாஸாக்களுக்கான உதவிப் பணிகள் பலராலும் உரிய சந்தர்ப்பங்களில் தேவைக்கேற்ப வழங்கப்படுகின்ற போதிலும் சம்மாந்துறையிலுள்ள சனத்தொகையை கருத்திற் கொண்டு ஊர் நிர்வாகத்திடம் அதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்; அதற்காக தகுந்த வாகனம் ஒன்றை நம்பிக்கையாளர் சபை ஊடாக கொள்வனவு செய்து அதை நம்பிக்கையாளர் சபை பராமரிப்பு செய்வதாகவும் தீர்மாணித்துள்ளார்கள்.

ஜனாஸா வாகான கொள்வனவுக்கான நிதி திரட்டும் நடவடிக்கை தற்போது உத்தியோபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயத்துக்காக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் பின்வரும் கணக்கு விபரங்களுடனான தனியான வங்கிக் கணக்கொன்றும் ஆரம்பிக்கப்பட்டு நிதி அறவிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

*The Board of Trustees – Sammanthurai*

A/C No: 93764102

Bank of Ceylon (BOC)

Sammanthurai Branch

இது விடயமாக கௌரவத்துக்குரிய சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் அஷ்ஷெய்க். எம்.ஐ.எம். இஷ்ஹாக் நளீமி அவர்களிடம் கேட்டபோது,

அவர் தெரிவித்ததாவது,

“எமது ஊரில் மிக நீண்டகாலமாக தேவையாகவுள்ள ஜனாஸா வாகனங்கள் முஸ்தபா மௌலவி மற்றும் பிரதேச சபை ஆகியவற்றினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை சிறப்பானதாகும்.

இருப்பினும் எமதூரின் சனத்தொகை மற்றும் வெளியூர் தூர இடங்களிலிருந்து ஜனாஸாக்களைக் கொண்டு வருவதில் பலருக்கும் ஏற்படுகின்ற சிரமத்தை ஓரளவு குறைப்பதற்கான சிறந்த வழியாக நாம் அனைவரும் ஒரே குடையின் கீழ் நம்பிக்கையார் சபையினூடாக ஜனாஸா வாகனத்தை கொள்வனவு செய்து, அதை தொடர்ந்து பராமரிப்பதெனவும் கடந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும், எமக்கு பல சமூக சேவை தொண்டு நிறுவனங்கள் இது விடயமாக தெரிவித்திருந்தபோதும்; சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி அமைப்பும், துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர்கள் செயற்படும் அமைப்பான சமூக பொருளாதார சமாதான ஒன்றியம் (SEPO) ஆகியன எழுத்து மூலம் எமக்கு இத்திட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நிதி அறவீட்டுப் பணியை SEPO அமைப்பு பாரம் எடுப்பதாக கூறியிருந்தனர்.

அதன் பின்னர் குறித்த அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான ஒப்புதலையும் நம்பிக்கையாளர் சபை வழங்கி இருக்கின்றது.

இந்தப் பணி நம் அனைவருக்கும் பொதுவானது.

இந்த நிதி திரட்டும் பணிக்காக ஊரில் உள்ள ஏனைய சமூக சேவை அமைப்புக்களும் இணைந்து கொள்ள முடியும்.

குறித்த வாகான கொள்வனவுக்கான நிதி அறவீடானது உத்தியோபூர்வமானது என்பதால் இவ் விடயத்தை நம்பிக்கையாளர் சபை முஸ்லிம் சமய கலாச்சார திற்கும்எழுத்துமூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வாகன கொள்வனவு திட்டத்திற்கு தன்னார்வத்துடன் பங்காற்ற விரும்பும் சகோதரர்கள் தங்கள் சுயமாகவோ அல்லது சமூக அமைப்புக்களாகவோ நம்பிக்கையார் சபையுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கமுடியும்.

எனவே, இத் திட்டத்திற்கு அனைத்து ஊர் மக்களும் தங்கள் அன்பான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.”

அன்பின் நண்பர்களே!

உலமாக்களே!!

தாய்மார்களே!!!

புத்திஜீவிகளே!!!

இன்றைய முகநூல் மாயை காலகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு உள்ளதெல்லாம் கொட்டித்தீர்க்கும் நவீன ஜாஹிலியாவில் நாம் அனைவரும் சிக்கிக் கொண்டிருக்கின்றோம்.

விமர்சனங்கள் இல்லாத நிர்வாகங்கள் எதுவுமே இல்லை.

விமர்சனங்கள் விளைந்தெழுகிறபோதுதான் தெளிவுகளும், வளர்ச்சிகளும் படர ஆரம்பிக்கிறது.

கட்டுரை எழுதும் என் மீது பலருக்கு விருப்பு வெறுப்பு இருக்கலாம்!

இந்த நல்ல திட்டத்தை ஆரம்பித்திருக்கும் சபையோர் மீது பலருக்கும் விருப்பு, வெறுப்பு இருக்கலாம்!!

அதற்காக இந்தத் திட்டமும்; இதற்காக இடப்பட்டுள்ள இந்தப் பதிவும் Skip செய்து விட்டு போவதாக அமையக்கூடாது.

எழுதிய எனக்கும் மரணம் உள்ளது; வாசிக்கும் உங்களுக்கும் மரணம் உள்ளது.

நமது மரணங்கள் எந்த ரூபத்தில் அமையப் போகிறது என்பதை நாம் யாரும் அறியோம்.

இந்த செக்கன் கூட நாம் மரணிக்கலாம்; நமது இறுதித் தடய அமலாகக் கூட இந்த நற்பணி நமக்கு கை சேர்க்கலாம் என்ற உணர்வை நம் அனைவரது உள்ளங்களிலும் அல்லாஹ் ஏற்படுத்துவானாக!!!!

✍️ கியாஸ் ஏ. புஹாரி

எனவே,

குறிப்பிட்ட இந்த வாகன கொள்வனவுக்கான நிதி திரட்டும் பணிக்கு நம்மாலான ஒத்துழைப்புகளை இறைவனுக்காக செய்வோம்!!!!

*Account Details*:

The Board of Trustees – Sammanthurai

A/C No: 93764102

Bank of Ceylon (BOC)

Sammanthurai Branch