நடிகர் அல்லு அர்ஜூனுக்குப் பிணை
புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு பிரீமியர் காட்சி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வந்த அல்லு அர்ஜுனைக் காண கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.
பெண் உயிரிழந்த சம்பவத்தில் திரையரங்கு மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யபட்ட நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப்பதிவு செய்ய பொலிஸார் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டிருந்தனர்.
தொடர்ந்து, விசாரணை செய்வதற்காக ஐதராபாத் சிக்கடபள்ளி பொலிஸார் அல்லு அர்ஜுனை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
அவரிடம் தொடர்ந்து 2 மணி நேரமாக விசாரணை நடந்து வந்தது. பிறகு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அங்கு, நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தெலுங்கானா நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.