தங்கப் பதக்கம் வென்ற சமித்த துலான்
பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ தடகள வீரரான அதிகாரவாணையற்ற அதிகாரி கே.ஏ. சமித்த துலான், உலக பரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்று வரலாறு படைத்துள்ளார்.
டுபாயில் உலகின் தலைசிறந்த பரா தடகள வீரர்களுடன் போட்டியிட்டு, துலான் 61.88 மீற்றர் தூரம் எறிந்து முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் என்பது உலகளாவிய ரீதியில் நடைபெறும் மதிப்புமிக்க நிகழ்வாகும். இது உயர் மட்டத்தில் போட்டியிடும் பரா தடகள வீரர்களை ஒன்றிணைக்கிறது. துலானின் வெற்றி சர்வதேச பரா விளையாட்டுகளில் இலங்கையின் எழுச்சியை காட்டி நிற்கின்றது.