லிபியாவில் படகு விபத்து : 16 பாகிஸ்தானியர்கள் பலி
லிபியாவில் 64 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர்.
குறித்த படகில் பயணித்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி லிபியாவின் ட்ரிபோலி பகுதியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களின் கடவுச்சீட்டுகளை வைத்து அவர்கள் பாகிஸ்தானியர்கள் என உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.