சினிமா

டி. இமானின் எக்ஸ் தள பக்கம் முடக்கம்

இசையமைப்பாளர் டி. இமானின் எக்ஸ் தள பக்கம்  முடக்கப்பட்டுள்ளதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் ,

‘அனைவருக்கும் வணக்கம், எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கப்பட்டுள்ளது . என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் தற்போது ‘எக்ஸ்’ -ஐ அணுகி, எனது கணக்கை விரைவில் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

புதிதாக அந்த பக்கத்தில் இருந்து வரும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம். உங்கள் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி. எனது எக்ஸ் பக்கத்தை மீண்டும் பெற்றவுடன் உங்களிடம் கூறுகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *