கனடாவிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியம் மீது இரட்டிப்பு வரி விதிப்பு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலிருந்து அமெரிக்காவிற்கு விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலாக கனடாவிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு ஏற்கெனவே அறிவித்திருந்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்க அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து ஒன்டாரியோ மாகாண பிரதமா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘கனடா மீது ட்ரம்ப் விதிக்கும் கூடுதல் வரி அமெரிக்க பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். அந்த வரி விதிப்பு விலைவாசியை அதிகரித்து அமெரிக்க மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும்’ என்று எச்சரித்தாா்.
இதேவேளை கனடா, மெக்ஸிகோவின் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிவிதிப்பில் இருந்து கடந்த 2020-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள பொருட்களுக்கு விலக்கு அளிக்க ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டாா். எனினும்,வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வராத சுமாா் 62 சதவீத கனடா பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடரும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.