சீனாவின் புதிய செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகம்
மோனிகா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு செயலியை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
மோனிகா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு செயலியானது ஒரு பணியை கொடுத்தால், அதுவே முழுமையாக ஆய்வு செய்து பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் முடித்துக் கொடுத்துவிடும் ஆற்றல் கொண்டதாக கூறப்படுகிறது.
அதேபோல இந்த செயலியானது ஒரு விடயத்தை நாம் கேள்வியாக கேட்டால், உடனடியாக குறித்த விடயத்துடன் தொடர்புடைய தலைப்புக்களைத் தேடி , ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அறிக்கையாக தயாரித்து, விளக்கமாகவும் வழங்குகிறது.
இந்நிலையில் உலகின் ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சீனாவின் ஒரு புதிய புரட்சி என கருதப்படுகிறது.