இதய நோயைக் கண்டறியும் AI செயலி கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர் ஒருவரினால் 7 நொடிகளில் இதய நோய்களைக் கண்டறியும் AI செயலியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அதி நவீன கண்டுபிடிப்பு, இதய நோய் கண்டறிதலில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதிலிருந்தே தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட சித்தார்த் நந்தியாலா என்ற குறித்த மாணவன், Oracle மற்றும் ARM நிறுவனங்களின் AI சான்றிதழ்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.