சென்னை அணிக்கு 167 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ்- லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று சென்னை அணிக்கு 167 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.