உலகம்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி!


நாட்டின் இருவேறு பகுதிகளில் இன்று (15) இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று அதிகாலை, தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற கெப் வாகனம் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 37 மற்றும் 43 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், இன்று அதிகாலை, காலி-மாத்தறை பிரதான வீதியில், காலியில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிர் திசையில் இருந்து வந்த காருடன் மோதியதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கொன்னகஹஹேன வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *