இளையராஜாவால் குட் பேட் அக்லி படத்துக்கு வந்த சோதனை
ஆதிக் ரவிசந்திரன் இயக்கி குட் பேட் அக்லி படத்தில், தான் இசையமைத்த படலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 7 நாட்களுக்குள் படத்தில் இருந்து பாடல்களை நீக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ஏப்ரல் பத்தாம் தேதி தியேட்டரில் வெளியானது.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக்ரவிச்சந்திரன், ஒரு ரசிகரின் அஜித்தை எப்படி எப்படி எல்லாம் பார்க்க ஆசைப்படுவான் என்பதை தெரிந்து கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கப்பலில் அழகிகளும் ஒத்த ரூபா தாரேன் என்ற படலுக்கு ஆடி இருப்பார். கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் ஒத்த ரூபா தாரே பாடல் இடம் பெற்று இருக்கும். அதே போல, அஜித் அறிமுக காட்சியில் இளமை இதோ இதோ பாடல் சண்டை காட்சி முழுக்க இடம் பெற்று இருக்கும். இந்த பாடல்கள் வரும் காட்சியில் தியேட்டரில் விசில், ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே இந்த பழைய பாடல்கள் தான் என பேச்சும் இழுந்துள்ளது. மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் பெயருக்குத்தான் இசையமைத்து இருக்கிறார். அவர் இசையமைத்த பாடாலும் கேட்கும்படி இல்லை என பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு இசைஞானி இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. படத்தில் தான் இசையமைத்த ஒத்த ரூவா தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் 5 கோடி கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், படத்தில் இடம் பெற்றுள்ள இந்த 3 பாடல்களையும் படத்தில் திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், 7 நாள்களுக்குள் நிபந்தையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.