பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய முக்கிய வீரர்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான லோக்கி ஃபெர்குசன் ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில் இரு பந்துகள் மட்டுமே வீசிய லோக்கி ஃபெர்குசன் தனது இடது தொடைப் பகுதியில் வலி ஏற்பட்டதால் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், அவருக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டதால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடமாட்டார் என அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்தார்.
“ஃபெர்குசன் இந்தத் தொடரிலிருந்து விலகுகிறார். அவர் மீண்டும் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது மிகவும் கடினம். அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.