உள்நாடு

நடுக்கடலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது!

கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மதுபானம் என கருதி அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மோசமாக பாதிக்கப்பட்ட இரு மீனவர்களும் சிங்கப்பூர் வணிகக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டெவோன் 5 என்ற மீன்பிடிப் படகின் மீனவர்களே இந்த அவலநிலையை எதிர்கொண்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அவசர முதலுதவிக்கான வழிமுறைகளை மருத்துவக் குழுக்கள் வழங்கியுள்ளதாகவும், ஆழ்கடல் பகுதியில் உள்ளதால் அவர்களை மீட்க மற்றொரு கப்பலை கடலுக்கு அனுப்ப போதிய கால அவகாசம் இல்லை என்றும் அவர் கூறினார்.

அவர்களை அருகில் உள்ள கப்பலில் ஏற்றி கரைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

படகு இலங்கை கடற்கரையில் இருந்து 320 கடல் மைல் (592.64 கிமீ) தொலைவில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *