விளையாட்டு

இலங்கை வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி!

இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை வருகிறது.
 
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செப்டெம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு இரண்டாவது போட்டி செப்டெம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த இரு போட்டிகளும் காலியிலேயே நடைபெறவுள்ளன.
 
இந்நிலையில் குறித்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டிம் சௌதி அணித்தலைவராக செயற்படவுள்ளதோடு கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் 15 பேர் கொண்ட நியூசிலாந்து குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
 
நியூசிலாந்து குழாம்:
டிம் சௌதி (தலைவர்), டொம் பிளன்டல் (வி.கா.), மைக்கல் பிரேஸ்வெல், டெவோன் கொன்வே, மட் ஹென்ட்ரி, டொம் லதம் (உப தலைவர்), டரில் மிட்சல், வில் ஓருக், அஜே பட்டேல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, மிட்சல் சான்ட்னர், பென் சீர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *