விளையாட்டு

23 ஆண்டுகளுக்கு பின் இலங்கை கிரிக்கெட்டில் நிகழும் அரிதான சம்பவம்.

சுற்றுலா நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அப்போது அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியது.

எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் செப்டம்பர் 18 முதல் 23ஆம் திகதி வரை என 6 நாட்கள் நடக்கிறது. 21ஆம் திகதி ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *