இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு, இஸ்ரேலிய பாதுகாப்பு சபை விடுத்த எச்சரிக்கை!
இலங்கையின் அறுகம்பை மற்றும் தென் மற்றும் மேல் கடற்கரைப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறும், அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் இஸ்ரேலியர்களுக்கு அந்த நாட்டு பாதுகாப்பு சபை அறிவவுறுத்தியுள்ளது.
இந்த பகுதிகளில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள், இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் அல்லது குறைந்தபட்சம் கொழும்புக்கு நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே இஸ்ரேலின் பாதுகாப்பு சபை இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு செல்லும் திட்டங்களை பிற்போடுமாறும் இஸ்ரேலிய பிரஜைகளை அந்த நாட்டு பாதுகாப்பு சபை அறிவுறுத்தியுள்ளது. அறுகம்பையில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பதால் அங்குள்ள தங்களது பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் அவ்வாறான எச்சரிக்கையை விடுத்திருந்தன.
எவ்வாறாயினும், அறுகம்பை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.