அறுகம்பே பகுதியில் வீதித்தடைகள் போடப்பட்டு சோதனைகள் தீவிரம்
அம்பாறை மாவட்டம் பொத்துவில் அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் என வெளியாகியுள்ள செய்தியினை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
இன்று அதிகாலை அப்பகுதிக்கு விரைந்த முப்படையினர் உள்ளிட்ட பொலிஸார் சுற்றுலா முக்கியத்துவ இடங்கள் சந்தேகத்துக்கிடமான வாகனங்களை இடைமறித்து சோதனை செய்வதுடன் தற்காலிக வீதி தடைகளையும் ஏற்படுத்தி அப்பகுதியால் செல்லும் வாகனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்