அனைவரையும் கதறி கதறி அழ வைத்த பிக் பாஸ்.. கடைசி வாரத்தில் இப்படி ஒரு வீடியோவா

பிக் பாஸ் 4 போட்டியாளர்கள் பலரையும் கதறி கதறி அழ வைத்திருக்கிறது பிக் பாஸ் திரையிட்ட எமோஷ்னல் வீடியோ. ரியோ, அர்ச்சனா, சுசித்ரா உள்ளிட்ட பலர் கண்ணீர் விட்டு இருக்கிறார்கள்.

 
பிக் பாஸ் 4 இறுதி வாரத்தை எட்டிவிட்டது. இருக்கும் 6 போட்டியாளர்களுக்கு என்ன டாஸ்க் கொடுப்பது என தெரியாமல் விழித்த காரணத்தால் என்னமோ பிக் பாஸ் இதற்கு முன் எலிமினேட் ஆனா போட்டியாளர்கள் மொத்த பேரையும் மீண்டும் வீட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறார்.

ஷிவானி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி தவிர மற்ற 16 போட்டியாளர்கள் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டில் தற்போது இருக்கின்றனர். நேற்று போட்டியாளர்கள் இதற்கு முன்பு செய்த காமெடியான விஷயத்தை வீடியோவாக போட்டு காட்டினார்.

இந்நிலையில் இன்று அனைவரையும் எமோஷ்னல் ஆக்கும் விதமாக ஒரு வீடியோவாக போட்டு காட்டினார். யார் என்று கூட தெரியாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அனைவரும் தற்போது தாத்தா, அப்பா, சகோதரன், மகன், தம்பி, நண்பன், அக்கா என பல விதமான சொந்தாமாக மாறி இருப்பது பற்றி தான் அந்த வீடியோ.

இந்த 100 நாட்களில் போட்டியாளர்கள் இடையே நடந்த மிகவும் எமோஷ்னல் ஆன விஷயங்களை தான் மீண்டும் போட்டு காட்டி இருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்ததும் அனைவரும் கலங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அனைவரின் கண்களிலும் கண்ணீரை பார்க்க முடிந்தது. சில தினங்களில் ஷோ முடியும் முன்பு அனைவரையும் பிக் பாஸ் இப்படி கண்ணீர் விட வைத்துவிட்டாரே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!