காதல் கடிதத்தை வௌியிட்ட ஷகீலா…

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். போதும் அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் பேசிய ஷகீலா, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன்.என்னை போல் மாணவிகள் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன் என்று கூறி இருந்தார். அதே போல தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் சினிமாவில் நடிக்க வந்தேன் என்றும் கூறி இருந்தார் ஷகீலா. இத்தனை வயது ஆகியும் ஷகீலா திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

ஆனால், ஒரு திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஷகீலா. அதே போல தன்னுடைய வாழ்வில் பல்வேறு காதல் கதைகள் இருப்பதாக சொன்ன ஷகீலா, அதில் ஒரு இருப்பதாக பற்றி கூறி இருந்தார். அதில், நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடித்த ‘சோட்டா மும்பை’ என்ற படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தை மணியன்பிள்ள ரஜூ தான் தயாரித்து இருந்தார். அந்த சமயத்தில் என் தாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. என் தாயின் சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. இதனால் மணியன்பிள்ள ராஜுவிடம் அந்த படத்தில் நான் நடிப்பதற்கான முழு சம்பளத்தையும் முன்கூட்டியே கேட்டு என்று கேட்டிருந்தேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று அவரும் எனக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தை அந்த படம் முடிவதற்குள்ளாகவே கொடுத்து விட்டார் அந்த சமயம் அந்த பணம் என் தாயின் சமயம் மிகவும் உதவியாக இருந்தது. இந்த காரணத்தால் அந்த படத்தில் நடித்த போது ஒரு கட்டத்தில் அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. இதனால் அவரிடம் நான் காதல் கடிதத்தை கொடுத்தேன். ஆனால், கடைசி வரை அந்த கடிதத்திற்கான பதிலை அவர் சொல்லவே இல்லை’ என்று கூறி இருந்தார் ஷகிலா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!