கடுமையாக கண்டித்த நீதிபதி: நடிகர் விஜய் எடுத்த அதிரடி முடிவு

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்க்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கக்கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற காரை இறக்குமதி செய்தார்.

அந்த காருக்கு இறக்குமதி வரியாக ரூ.1,88,11,045 செலுத்திய பின்னர், நுழைவு வரி செலுத்த கூறப்பட்டது.

மேலும் நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகனப் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும் என்று வணிகவரித்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில் காருக்கு இறக்குமதி வரி செலுத்திவிட்டேன் ஆனால் நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே, பதிவு செய்ய முடியும் என்பதால், அந்த காரை பயன்படுத்த முடியவில்லை.

எனவே இது தொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

விஜய் தொடர்ந்த இந்த வழக்கில், 20 சதவீதத்தை செலுத்திவிட்டு வாகனத்தை பதிவுசெய்ய இடைக்கால உத்தரவு 2012 ஜூலை 17 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி 2012 ஜூலை 23 ஆம் தேதி 20 சதவீதத்தை செலுத்திவிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்து பயன்படுத்தி வருகிறார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நடிகர் விஜய் 2 வாரங்களில் வரி செலுத்த உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு தொடர்ந்ததற்காக 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதை முதல்வரின் நிவாரண நிதிக்கு இரண்டு வாரங்களில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும் எனவும் கடுமையாக கண்டித்தார்.

டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி தனது திரைப்படங்களைப் பார்க்கும் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை நடிகர் மதிக்க வேண்டும்.

அவர்களின் திரைப்படங்கள் சமூகத்தில் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிரானவை. வரி ஏய்ப்பு என்பது ஒரு தேசிய விரோத பழக்கம், அணுகுமுறை மற்றும் மனநிலை மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கருதப்பட வேண்டும்.

எனவே இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்தன. இந்நிலையில், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதில், வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives