திருமண ஏற்பாடு நடந்து வந்த நிலையில் காதலர் மரணம்: கண்ணீரில் நடிகை

Share on facebook
Share on twitter
Share on whatsapp

பிக் பாஸ் பிரபலங்களான சித்தார்த் சுக்லாவுக்கும், நடிகை ஷெஹ்னாஸ் கில்லுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சித்தார்த் சுக்லா செப்டம்பர் 2ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 40 வயதே ஆன சித்தார்த் திடீர் என்று இறந்த செய்தி அறிந்து பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

சித்தார்த்தின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். சித்தார்த்தும், நடிகை ஷெஹ்னாஸ் கில்லும் காதலித்து வந்தார்கள். இந்நிலையில் அவர்களை பற்றி புது தகவல் வெளியாகியிருக்கிறது.

சித்தார்த்துக்கும், ஷெஹ்னாஸுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாம். டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்களாம். திருமணத்தை மூன்று நாட்கள் நடத்த திட்டமிட்டு மும்பையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் டச்சில் இருந்தார்களாம்.
sidharth shuklaசித்தார்த், ஹெஷ்னாஸ் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியுமாம். திருமண நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்று ரகசியமாக வைத்திருந்தார்களாம்.
திருமண கனவு கண்டு வந்த ஷெஹ்னாஸின் நிலையை நினைத்து தான் பிரபலங்கள் வருத்தப்படுகிறார்கள்.

ஷெஹ்னாஸுடன் சேர்ந்து பணியாற்றிய நடிகை ஜஸ்லீன் கூறியதாவது,

நான் ஷெஹ்னாஸிடம் பேசினேன். அவர் ஒரு இடத்தில் அமர்ந்து எதுவும் பேசவில்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவர் அருகில் சென்று பேச முயன்றபோது என் பக்கத்தில் உட்காரு என்றார். ஷெஹ்னாஸுடன் அவரின் சகோதரர் இருக்கிறார். அவர் நிச்சயம் நல்லபடியாக பார்த்துக் கொள்வார் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives